காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட அம்பகரத்தூர் பகுதியில் உள்ள பழைய அம்பகரத்தூர், காலனி தெரு, கல்லடி தெரு, பழைய சினிமா கொட்டகை தெரு, ரயிலடி தெரு, எல்.ஜி.ஆர் காலனி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 2000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஆறு கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் சுடுகாடானது அம்பகரத்தூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் பேரளம் ரயில்வே விரிவாக்கத் பணியின் போது சுடுகாட்டுக்கு அருகே உள்ள இடத்தில் அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையால் சுடுகாடு, தகனமேடை, கருமாதி மண்டபம் உள்ளிட்டவை இடிக்கப்பட்டு சுடுகாடு குறுகலானது இதனால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு அரசுத் துறைகளுக்கு தகவல் தெரிவிக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்தப் பிரச்சனை குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரை அப்பகுதி மக்களுடன் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் சுடுகாட்டுக்கு அருகே உள்ள இடம் குறுகலாக உள்ளதாகவும் அதன் அருகில் உள்ள அரசகத்தை ஒதுக்கித் தர வேண்டும் எனவும் இரண்டாவது முறையாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோல திருநள்ளாறு சுப்பராயபுரம் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாங்குவதற்கு தவணை முறையில் பணம் செலுத்தி முடித்ததாகவும் தற்போது பழனிவேல் உயிரிழந்த நிலையில் குடியிருக்கும் இடத்தை அவரது குடும்பத்தினரிடமிருந்து பட்டா செய்து தர அனுமதி அளிக்கக் கோரி பக்கிரி சாமியின் குடும்பத்தினருடன் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தார்.











; ?>)
; ?>)
; ?>)