தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண ஊனம், கடும் ஊனம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5000, ரூ 10,000, ரூ 15,000 என ஆந்திர மாநிலம் வழங்குவதைப் போல் தமிழக அரசு மாத உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரியும், உத்தரவு நகல் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாத உதவித்தொகை வழங்க கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண ஊனம், கடும் ஊனம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5000, ரூ 10,000, ரூ 15,000 என ஆந்திர மாநிலம் வழங்குவதைப் போல் தமிழக அரசு மாத உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரியும், உத்தரவு நகல் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாத உதவித்தொகை வழங்க கோரியும் மாற்றுத் திறனாளிகள் சுமார் 200 க்கும் மேற்பட்டவர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.











; ?>)
; ?>)
; ?>)