திண்டுக்கல்லில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது, 2 கிலோ கஞ்சா, ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர்(பொறுப்பு)மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அண்ணாநகர், தைலக்காடு பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த குமரன் திருநகரை சேர்ந்த ராஜ்குமார்(38), மேற்கு மரியனாதபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (எ) குருவிசரவணன்(42), செல்லமந்தாடியை மதன்குமார்(28) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, ஆட்டோ, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.











; ?>)
; ?>)
; ?>)