மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சாலாச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் சாலாச்சிபுரத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தின் அருகே விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அதிகாரிகள் விஷ வண்டு கூடை அகற்றி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கருப்பட்டி இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் பொம்மன் பட்டி கணேசபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வாடிப்பட்டிக்கு செல்பவர்கள் சாலாச்சிபுரம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது வாகன அதிர்வுகளால் விஷ வண்டு கூடு களையும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
ஆகையால் பொதுமக்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள விஷ வண்டு கூடை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)