இதுகுறித்து அவர் ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது ஆப்பிரிக்க நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம், ஜேஎன்ஐஎம் என்ற தீவிரவாதக் குழு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஒருவரைக் கடத்தியது. பின்னர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் பிணையாகப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்தது.

இந்த ஜேஎன்ஐஎம் ஆயுதக் குழு வடக்கு மாலி, நாட்டின் மையப்பகுதி மற்றும் நைஜர், பர்கினா ஃபாசோ நாடுகளின் எல்லையோரப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. மாலியில் ராணுவ ஆட்சியின் தலைவர் அசிமி கோய்டா, தீவிரவாதக் குழுக்களை முறியடிப்பதாகச் சூளுரைத்துள்ளார். இதற்காக அவர் ரஷ்ய உதவியை நாடியுள்ளார். அது குறிப்பிடத்தக்க அளவு அவருக்குப் பலனும் கொடுத்து வருகிறது.
இருப்பினும், இப்போதைக்கு மாலியின் தலைநகர் பமாகோ ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்தாலும் கூட ஜேஎன்ஐஎம் ஆயுதக் குழு தலைநகர் நோக்கி வலுவாக முன்னேறி வருவது மக்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான மாலியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடத்தப்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளனர். மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களில் 2 பேர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். தென்காசி கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா(36), கண்மணியா புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடத்தப்பட்டுள்ளார். மாலியின் கோப்ரி நகரில் மின் மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தியத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களில் 5 இந்தியர்கள் நேற்று முன்தினம் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட 2 பேரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என ஒன்றியம் மாநில அரசுகள் விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் மு. ஞானமூர்த்தி தெரிவித்துள்ளார்.











; ?>)
; ?>)
; ?>)