கோவை, பெரியநாயக்கன் பாளையம் அடுத்து உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சி செல்வபுரம் கட்டாஞ்சி மலைப் பகுதியில் நீண்ட நாட்களாகவே மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், அங்கு உள்ள கோபனாரி பகுதியில் பூர்வ பழங்குடியின மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், பெரியநாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நாம் தமிழர் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கையில் பதகைகளை ஏந்திக் கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோசங்களை எழுப்பினர்.
ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் தடை விதித்து இருந்த நிலையில் அதனை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சோபனாரி பழங்குடி மக்கள் சுமார் 70 க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.












; ?>)
; ?>)
; ?>)