உலகின் உயரமான கிலிமஞ்சாரோ உஹுரு சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் சிவ விஷ்ணுவிற்கு, நடிகை குஷ்பூ அன்பு முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.

ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ள, 19 ஆயிரத்து 340 அடி உயரமுள்ள கிலிமஞ்சாரோ சிகரம், உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றாகும்.
இந்த சிகரத்தை ஐந்து வயதில் ஏறி, உலகில் இளம் வயதில் இந்த சாதனை படைத்த மூன்றாவது குழந்தையாக விஷ்ணு பெயர் பதிந்துள்ளார்.
தமிழ் அட்வென்ச்சர் டிரக்கிங் கிளப் சார்பாக முத்தமிழ்செல்வி தலைமையில் சென்ற குழுவினர், நவம்பர் ஒன்றாம் தேதி ஏற்றம் தொடங்கி, ஏழு நாள் பயணத்திற்குப் பிறகு சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர்.

இந்த குழுவில் விருதுநகர், காங்கயம், கோவை, கடலூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.
சென்னை விமான நிலையம் வந்தபோது, உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ஹைதராபாத் விமானத்தில் வந்து இறங்கிய நடிகை குஷ்பூ, சிறுவன் விஷ்ணுவுக்கு அன்பு முத்தம் கொடுத்து பாராட்டினார்.











; ?>)
; ?>)
; ?>)