• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

எஸ்.ஐ.ஆர் தமிழ்நாட்டிற்கு எதிரானது என்பதை திமுக அரசு நிரூபிப்போம்..,

ByP.Thangapandi

Nov 8, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை அரங்கத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்., பீகாரில் 62 லட்சம் வாக்குகளை நீக்கினார்கள், பாஜகவின் ஆதரவு பெற்ற அரசு தான் அப்போது இருந்தது.,

தமிழ்நாட்டில் திமுக அரசு இருக்கிறது, எஸ்.ஐ.ஆர் – ல் முறைகேடு நடந்துவிட கூடாது என்பதற்காக அனைத்து கூட்டணி கட்சிகளையும் இணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு சொன்ன ஒரே முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.,

உசிலம்பட்டி பகுதியில் பெரும்பாலான மக்கள் பிழைப்பிற்காக பல்வேறு வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளனர், அவர்கள் பெயர் நீக்க படலாம் என்ற கருத்து நிலவுகிறது., திமுக ஒன்றிய செயலாளர்கள் முதல் வாக்குச்சாவடி முகவர்கள் வரை அவர்களை கவணம் செலுத்தி, வரவழைத்து பெயர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, ஒட்டுமொத்தமாக எஸ்.ஐ.ஆர் தமிழ்நாட்டிற்கு எதிரானது என்பதை நிரூபிப்போம் என பேட்டியளித்தார்.,