காரைக்கால் மாவட்டத்தில் போராளிகள் குழு பல்வேறு சமூகப் பிரச்சனைகளை கையில் எடுத்து வெற்றி கண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாடுகளால் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை நகராட்சி மற்றும் காவல் துறை மூலம் பிடித்து அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றே வெளியிட்டு இருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த காரைக்கால் போராளிகள் குழுவினர். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம், காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ள அம்பேத்கர் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அருகில் உள்ள நகராட்சி பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்க வேண்டும், அப்பகுதியில் உள்ள நகராட்சி இலவச கழிப்பறையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள இலவச கழிவரையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இயற்பியல் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி மாணவர்களின் கல்விக்கு உதவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை காரைக்கால் போராளிகள் குழுவின் தலைவர் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.