காரைக்கால் மாவட்டம் திருப்பப்பட்டினம் வடகட்டளை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ படைவெட்டி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வட கட்டளை கிராமத்தினர் முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து ஆலய திருப்பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் நிறைவுற்று கடந்த 24ஆம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 31ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையும் நேற்று முதல் யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜை தொடங்கி ஆறு மணி அளவில் மகா பூர்ணாகதியுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து ஆலயத்தை ஆலயத்தை வலம் வந்து ஆலய விமான கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகமும் மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வடகட்டளை கிராம முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர், ஊர் மக்கள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.