• Sat. Oct 25th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மக்களையும் மண்ணையும் தெரிந்து கொள்கிற அரசாங்கம் தற்போது இல்லை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இறவார்பட்டியில் இருந்து அச்சங்குளம் கிராமத்திற்கு செல்ல வைப்பாற்றின் குறுக்கே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இறவார்பட்டி அச்சங்குளம் இடையே தரைப்பாலம் கட்டி முடித்த 3 மாதங்களில் வைபாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் தரை பாலம் அடித்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் தரைப்பாலம் இடிந்து 25 ஆண்டுகள் ஆன நிலையிலும் தற்போது வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைக்கப்படவில்லை எனக்கூறி இறவார்பட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா இறவார்பட்டி அச்சங் குளம் இடையே செல்லும் இடிந்த தரைப்பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் இடிந்த பாலத்தினால் இறவார்பட்டி மற்றும் அச்சங்குளம் கிராமத்து மக்கள் திலகபாமாவிடம் 2 கிராம பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர். மேலும் இடிந்த பாலத்தை உடனடி யாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக பொதுமக்களிடம் திலகபாமா தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையிலும் கிராமத்திற்கு போதுமான போக்கு வரத்து வசதிகளை தமிழக அரசு மேம்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் 20 கிராம மக்கள் பயன் படுத்தும் பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என திலகபாமா தெரிவித்தார்.

மேலும் பேசிய திலகபாமா தமிழக அரசை பொருத்தவரையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டால் மோட்டரும் படகும் வாங்கி வைக்கிறார்கள் என திலகபாமா குற்றம்சாட்டினர்.

மேலும் மழைக் காலங்களில் கலைஞர் காலம் முதல் தற்போது வரை தண்ணிக்குள் நின்று போட்டோ ஷூட் எடுத்ததை தவிர வேறு எந்த வேலையும் செய்ய வில்லை என விமர்சனம் செய்தார்.

மேலும் மழைநீர் வடிகாலுக்கு என தமிழக அரசு 4000 கோடிக்கு பணிகள் நடந்திருப்பதாக கூறும் அரசு அதற்கான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

மேலும் பேசிய பாமக பொருளாளர் திலகபாமா இந்த அரசுக்கு நீர் மேலான்மை பற்றி எதுவும் தெரியாது எனவும் மக்களையும் மண்ணையும் தெரிந்து கொள்கிற அரசாங்கம் தற்போது இங்கு இல்லை என்றார். மேலும் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி நீர் மேலாண்மை குறித்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

மேலும் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் திலகபாமா ஏரியை திறப்பதற்கு அதிகாரியின் வேலை எனவும் அங்கு எம்எல்ஏக்கு என்ன வேலை எனவும் இதில் ஏன் உங்கள் ஈகோவை ஏன் காமித்து கொண்டு இருக்கிறீர்கள் என விமர்சனம் செய்தார்.

மேலும் அதிகாரிகள் அவர்களின் வேலையை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார். மேலும் அதிகாரிகள் சரியாக வேலை செய்ய வில்லை என்றால் மக்கள் பிரதி நிதியாக நீங்கள் கேள்வி கேட்கலாம் எனவும் ஏரியை திறப்பதற்கு தன்னை அழைக்கவில்லை என்பது இது எந்த விதமான அரசியல் என திலகபாமா விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய பாமக பொருளாளர் திலகபாமா தமிழகத்தை பொறுத்த வரையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அதிகரித்து உள்ளது மற்றும் தனிநபர் வருமானம் உயர்ந்து உள்ளது என அரசு கூற முடியாது எனவும் டாஸ்மாக்கில் எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என டார்கெட் உள்ளது என்றார். அதே சமயம் தமிழகத்தில் பாமக ஆட்சியில் இருந்தால் ஒரே நேரத்தில் அனைத்து கடைகளையும் மூடி விடுவோம் என்றார்

மேலும் பேசிய பாமக பொருளாளர் திலகபாமா பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு அணியாக இல்லை எனவும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரித்த படி பொதுக்குழு மற்றும் செயற்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது எனவும் பாமக நிறுவனராக மருத்துவர் ஐயா இருக்கிறார் என்றார்.

மேலும் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் பதட்டத்தில் பேசி வருகிறார் எனவும் கட்சிக்கு எதிராக செயல் பட்டதால் தான் எம்.எல்.ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே அவர் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

மேலும் தேர்தலில் நின்று அதிகாரத்திற்கு வருவது என்பது மக்கள் பணியாற்ற தான் எனவும் மக்கள் பணியாற்றுவதற்காக நாங்கள் ஓடி கொண்டிருக்கிறோம் எனவும் அது களத்தில் பேசும் என்றார்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாமக தலைவர் அன்புமணி தான் பேசுவார் என்றார்.