விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்த வீரமணி-ராதா தம்பதியின் மகள் பவானி இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பவானி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது கனமழை காரணமாக கடந்த 17ஆம் தேதி வீட்டின் சுவர் இடிந்து பவானி மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பவானி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி உயிரிழந்த மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கினார். மேலும் வீட்டின் பராமரிப்பு பணிக்கு தான் உதவுவதாகவும் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி உறுதியளித்தார். கே. டி. ராஜேந்திரபாலாஜி முன்பு மகளை இழந்த தாய் கண்கலங்கிய சம்பவம் அங்கு இருந்தவர்களை கண்கலங்க செய்தது.