• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சேரும் சகதியுமாக தவிக்கும் கிராம மக்கள்…

ByB. Sakthivel

Oct 22, 2025

புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ கணபதி நகர், இந்திரா நகர், மற்றும் வரதராஜ பெருமாள் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்,

இந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், மற்றும் சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை.

இதுகுறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அங்காளனிடம் பலமுறை தொகுதி மக்கள் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் தற்போது பெய்து வரும் கனமழையால் கணபதி நகர், வரதராஜ பெருமாள் நகர், மற்றும் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் மழை நீர் ஆறு போல தேங்கி சேரும் சகதியுமாக காட்சியளிப்பதால் இந்த பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் மின்சாரம் வசதி இல்லாததால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் எப்போது கடிக்குமோ என்ற உயிர் பயத்தில் தினம் தினம் வாழ்ந்து வருவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது…

கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் சாலை வசதி இல்லாததால் சேரும் சகதியுமாக உள்ளது,விஷ ஜந்துகளுக்கு இடையே வாழ்ந்து வருவதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று முறையிட்டால் அதிகாரிகள் தங்களை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள் சட்டமன்ற உறுப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் தற்போது பெய்துள்ள மழையால் இடுப்பளவு ‌தண்ணீரில் நீந்தி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த பகுதி மக்கள் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.