மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது. மேலும் கண்மாய், குளங்களுக்கு அதிக அளவு நீர் வரத்து வர தொடங்கியுள்ளது. தொடர் மழையால் மாலை 4 மணிக்கு பாலமேட்டை சேர்ந்த கால்நடை மருத்துவர் தங்கபாண்டியன் என்பவர் பாலமேட்டில் இருந்து காரில் புறப்பட்டு வாடிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். –

அந்த கார் எல்லையூர் பிரிவை தாண்டி வந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக தொடர்ந்து பெய்த பலத்த மழையில் ஊறியதால் திடீரென்று வேரோடு சாய்ந்து வேப்பமரம் காரின் மீது விழுந்தது. இதில் காரின் முன் பகுதியில் பலத்த சேதம் அடைந்தது. ஆனால் டாக்டர்தங்கபாண்டியன் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் வராததால் வாடிப்பட்டி பாலமேடு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சாலையின் குறுக்காக காரின் மீது இருந்த மரக்கிளையினைஅகற்றினர்.