விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமத்தில் உணவுக்காக வழி தவறி வந்த இரண்டு மான்களை பார்த்து தெரு நாய்கள் விரட்டின. இரண்டு மான்களும் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்ததில் தத்தளிப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பத்திரமாக இரண்டு மான்களை மீட்டு சிவகாசி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் பூவேந்திரன் காயம் அடைந்த இரண்டு வயது பெண் மான்களை மீட்டு ராஜபாளையம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.