• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முடிவுராத பாலத்தில் இருசக்கர வாகனம் கீழே விழுந்து ஒருவர் பலி!!

ByKalamegam Viswanathan

Oct 21, 2025

மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் சாலையில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இதில் ஆங்காங்கே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலைதிருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பாலத்தின் நடுப்பகுதி வரை ஒரு புறம் சாலை போடப்பட்டுள்ளது.நடுவே பணிகள் நிறைவு பெறாமல் உள்ள நிலையில் சாலையில் தடுப்பு வைக்கப்பட்டு வாகனங்கள் இருபுறமும் சர்வீஸ் சாலையில் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் தடுப்பை தாண்டி மேம்பாலத்தில் சென்றபோது மார்பில் பள்ளம் இருப்பது அறியாமல் இருசக்கர வாகனம் பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்தது. சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் தூக்கி வீசப்பட்டதில் பாலத்தின் மேலே விழுந்து விட்டார்.

வாகனத்தை ஒட்டி வந்த நபர்இருசக்கர வாகனத்தோடு பள்ளத்தில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதிகாலை நேரம் என்பதாலும் பாலத்தில் யாரும் சொல்ல முடியாத நிலை உள்ளதாலும் விபத்தை யாரும் கவனிக்கவில்லை.இன்று காலை ஆறு மணி அளவில் இந்த சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டவர்கள் மேலே காயத்துடன் ஒருவர் இருப்பதை கண்டு அங்கு சென்று பார்த்த போது வானத்திலிருந்து இருசக்கர வாகனம் என்று கீழே கிடப்பதையும் அதில் வாலிபர் ஒருவர் கிடப்பதையும் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றபோது சார் எனக்கு பிறகு உதவியுடன் பாலத்தில் கீழே கிடந்தவரை மீட்டு பரிசோதித்து பார்த்ததில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.தொடர்ந்து பாலத்தின் மேலே காயத்துடன் கலந்த மற்றொரு நபரை ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சோழவந்தான் அருகே உள்ள துவரிமானை சேர்ந்த காளிமுத்து – சித்ரா தம்பதியின் மகன் விக்னேஷ்வரன் 24 மற்றும் அவரது நண்பர் முத்துவேல் என்பதும் தெரியவந்தது. இறந்த விக்னேஸ்வரன் மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

தீபாவளி விடுமுறைக்காக தனது நண்பர் முத்துவேலுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று புறப்பட்டு வந்துள்ளார் அவர் எங்கே சென்றார் என்ற விவரம்தெரியவில்லை. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் தாலுகா போலீசார் காயமடைந்த முத்து வேலை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்த விக்னேஸ்வரன் உடலை கைப்பற்றி திரையிட பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.முடிவறாத பாலத்தில் சென்ற இரு சக்கர வாகனம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் ஒப்பந்ததாரர்கள் முறையான தடுப்பு வசதிகள் வைக்காததாலேயே இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அப்பொழுது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.