சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் இவரது மகன் மணிகண்டன் (வயது 19) பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக காணாததால் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சத்திரப்பட்டி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு கடை முன்பு தூக்கில் வாலிபர் தொங்கிக் கொண்டிருப்பதாக தகவல் அறிந்து நேரில் சென்ற போது இறந்தது மணிகண்டன் என்பது தெரியவந்தது உடனடியாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணிகண்டன் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.