மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதளுடன் தொடங்கியது தொடர்ந்து பால்குடம் அக்னி சட்டி முளைப்பாரி எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி தங்கள் விரதத்தை தொடங்கிய நிலையில் நேற்று இரவு காளியம்மன் கோவில் முன்பு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கோவில் முன்பு நீண்ட வரிசையில் இருபுறமும் பெண்கள் திருவிளக்கு வைத்து விளக்கேற்றி காளியம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு கோவில் முன்பு கும்மி பாட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 200க்கும் மேற்பட்டோர் வைகை ஆற்றிற்கு சென்று பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். கரும்புத் தொட்டில் கட்டியும் பறவை காவடி எடுத்தும் அழகு குத்ியும் வந்தனர் நாளை காலை கோவில் முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் இரவு மாவிளக்கும் நாளை மறுநாள் முளைப்பாரி எடுத்து வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் கிராம கமிட்டியினர் செய்துள்ளனர் மேலக் கால் ஊராட்சி சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது காடுபட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்