• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது..,

தூத்துக்குடி நகர பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி,மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேகா,சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் உள்ளிட்டோர் தூத்துக்குடி ரயில் நிலையம்,பழைய,புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட  நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படி கையில் பேக்குடன் நின்ற வாலிபரை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்ட போது அவரிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது, இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர், திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிபட்டி கீரன்குளம்  பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் செல்லத்துரை (25 ) என்பது தெரியவந்தது அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.”