• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தசரா திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவலருக்கு பாராட்டு..,

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 02.10.2025 அன்று சூரசம்காரம் மற்றும் 03.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் திருவிழாவை அமைதியாக நடத்தியதற்காக சுமார் 4,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தசரா திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்தமைகக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் . தனிப்பிரிவு காவல்துறையினர், தொழில்நுட்ப பிரிவு, சைபர் குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு சைபர் குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு ஆகிய காவல்துறையினரை வாழ்த்தி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில். எஸ்பி தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஊமையயாருபாகம் மற்றும்  போலீஸ் பிஆர்ஓ சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.