• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பாஜகவின் திருட்டு ஓட்டை எதிர்த்து கையெழுத்து இயக்கம்..,

பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் நடத்தி வரும் மாபெரும் கையெழுத்து இயக்கம் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சாமியார்மடம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.

   இன்று 10-10-2025  சாமியார்மடம் சந்திப்பில் பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்தும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் பினுலால்சிங் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
   
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் MP சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் உட்பட  காங்கிரஸ் மாநில மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.