விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழாண்மறைநாடு வழியாக செவல்பட்டி செல்லும் தார்சாலை உள்ளது. தார்ச்சாலை அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்யப்பட்டது .

ஆனால் பள்ளம் பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தடுமறி விழ வேண்டிய நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் எதிரெதிரே வரும்போது விலக முடியாமல் சிரமப்படுகின்றன.ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.