அவனியாபுரம் சிலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

30 ஆண்டுகாலம் புரட்சித் தலைவர் தமிழக மக்களின் இதயங்களில் வாழும் புரட்சித்தலைவரின் திருஉருவ சிலை 30 ஆண்டு காலமாக அவனியாபுரத்தில் இருக்கிறது. 1990 இல் நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதுவரை எந்தவித சேதாரமும் ஆனதில்லை, போக்குவரத்துக்கு இடையூறும் இல்லாமல் அவர் தனியாக நின்று கொண்டிருக்கிறார். மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
புரட்சித் தலைவரைப் பொருத்த அளவில் அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டு நேசிக்கக்கூடிய காலம் கடந்த அற்புதமான புகழுக்குரிய தலைவர். நேற்று முழு சந்திரன்(பௌர்ணமி) அந்த சந்திரனுக்கு கூட தேய்பிறை உண்டு தேய்ந்து கொண்டே வருவார். ஆனால் இந்த சந்திரன் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டிருக்கின்ற திருஉருவ சிலை என்றும் முழு நிலவாக காட்சியளிக்க கூடியவர். அவர் மறைந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இன்று புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட அவர் புகழ் பாடாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தலைவரை சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத்தான் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான் என்கிற செல்வம், தொழில்நுட்ப பிரிவு தலைமைச் செயலாளர் ராஜ் சத்யன் சத்யன் உட்பட பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

செல்லப்பா அண்ணன் அவர்கள் ஒரு தீக்குச்சி போல் உரசி போட்டு இருக்கிறார். காவல்துறை இந்த சமூக விரோதிகளை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆட்சியில் சமூகவிரோதிகளை பார்த்து காவல்துறை பயப்படும் அளவிற்கு அட்டூழியம் வளர்ந்து விட்டது. பெண்கள், இளைஞர்கள் காவல்துறையினர் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இல்லை இல்லை என்பதுதான் இந்த ஆட்சியில் நாம் பார்க்கிறோம். போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டில் இல்லை. டூ பாயிண்ட் ஜீரோ என பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தார்கள் எதுவும் சரி ஆகவில்லை.
இதே காவல்துறை எடப்பாடியார் கட்டுப்பாட்டில் வந்தால் அனைத்து சட்ட விரோத செயல்களும் கட்டுப்படுத்தப்படும். சமூக விரோதிகள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது, இருந்தால் அடங்கி ஒடுங்கி தான் இருப்பார்கள். இன்று இருக்கும் முதல்வர் மதுரைக்கு வர முடியாத சூழல் 2006 முதல் 2011 வரை துணை முதல்வர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார் அவரால் மதுரையில் ஒரு நிகழ்ச்சி கூட நடத்த முடியவில்லை. அந்த அளவிற்கு சமூக விரோதிகள் அட்டூழியம் இருந்தது. அம்மா இங்கே வந்து பேச முடியவில்லை முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்றுவதற்காக ஐந்து மாவட்ட மக்களின் நலனுக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்ததற்கு வரக்கூடாது என 19 மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. மனித வெடிகுண்டமாக மாறுவோம் என்று மிரட்டினார்கள். ஆனால் போனால் என் உயிர் தென் தமிழக மக்களுக்காக போட்டும் என அம்மா கூறி போராட்டத்திற்கு வந்தார். 2014ல் நான் ஆட்சிக்கு வருவேன் வந்தவுடன் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிப்பேன் சமூக விரோதிகளை ஒழிப்பேன் என்று சொன்னார்கள் அதேபோல ஒழித்து காட்டினார்.

ஆனால் இன்றைக்கு மீண்டும் புத்து ஈசல் போல அந்த கேடிகள் மீண்டும் புறப்பட்டு விட்டனர். முதல்வரின் பெரியப்பா என்று சொல்லக்கூடியவர் திமுகவால் வளர்த்தெடுத்தவர். அவரின் ஆட்சியில் அவரின் சிலைக்கு பாதுகாப்பு இல்லையப்பா. எங்க போய் சொல்ல பெரியப்பாவுக்கே பாதுகாப்பு இல்லை. உங்கள் காவல்துறையிடம் சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்லி காவல்துறை முனைப்பாக செயல்பட வேண்டும். புறநகர் கிழக்கு மாவட்டம் என்று பார்க்காமல் செயல்பட வேண்டும் இல்லையென்றால் தமிழக முழுவதும் இது வெடிக்கும். எங்கள் தலைவரின் சிலைக்கே பாதுகாப்பு இல்லை என்றால் எங்கள் எடப்பாடியாருக்கு என்ன பாதுகாப்பு.
ஏதோ தலைவர் சிலை என நினைக்காமல் காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். இந்த போராட்டத்தை உடனடியாக எடுக்காமல் நேற்று அறிவித்திருந்தால் வரக்கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. காவல்துறைக்கு எங்கள் பலம் தெரியும். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்கள் தலைவரின் சிலையை உடைத்த பிறகு சும்மா இருப்போம் என்று நினைக்க வேண்டாம். ஏறத்தாழ 50 மணி நேரத்திற்கு மேலாக ஆகியும் சிலை உடைத்தவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் என்ன காவல்துறை.
எங்களால் பாராட்டப்பட்ட காவல்துறை இன்று நாங்கள் பாராட்டு அளவிற்கு நடந்து கொள்கிறதா. மாநகரின் சட்ட ஒழுங்கு காவல்துறை ஆணையாளர் கவனம் செலுத்தி குழு அமைத்து கற்றவாளியை பிடித்து விட்டதாக நிலைப்பாடு வரவேண்டும். ஏப்பா பார்த்துக்குங்கப்பா குற்றவாளியை கண்டுபிடித்து தரணும் என கூறினார்.