அரியலூர் பைபாஸ் ரோட்டிலுள்ள ஏஓய் எம் மினி ஹால் கூட்டரங்கில், நாம் தமிழர் கட்சி சார்பில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம்,அன்பரசி ஆகியோர் தலைமை வகித்தனர் .

கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கலைராஜன், மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை ஒருங்கிணைப்பாளர் காசிநாதன்,மாநில தமிழ் மீட்சி பாசறை ஒருங்கிணைப்பாளர் தியாக அறிவானந்தம்,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மேனகா,உள்ளிட்டோர் அறிமுக கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர் .

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவிப்பின்படி, நாம் தமிழர் கட்சியின் 2026 அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக புகழேந்தி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மண்டல, மாவட்ட , பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.