மதுரை மாவட்டம் சேடபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் சேடபட்டி வட்டார மருத்துவ அலுவலர் Dr.விஸ்வநாதபிரபு அரசு இராஜாஜி மருத்துவமனை டீன் அருள்சுந்தரேஸ், நுரையீரல் துறை (TB) துணை இயக்குநர் ராஜசேகரன் தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் விஜயன் குடும்ப நலன் துணை இயக்குநர் நடராஜன், NHM செந்தில்னேஷ், சேடபட்டி சுகாதார நிலைய மருத்துவர் மாரிச்சாமி துணை சுகாதார நிலைய தலைமை மருத்துவர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேல்முருகன், சுகாதார ஆய்வாளர்கள் சுப்ரமணியம் பாலசுப்ரமணி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வராஜ், அலுவலர்கள் சுந்தரமூர்த்தி கண்ணன் சிவசந்திரன் சரவணன் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தெரசா சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயச்சந்திரன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஒன்றிய செயலாளர் சங்கர பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் கண் இதயம் பொது மருத்துவம் குழந்தை வளர்ச்சி மகப்பேறு மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல்,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவம் மகளிர் மருத்துவம் மனதள மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் நீரிழிவு நோய் மருத்துவம் உட்பட அனைத்து விதமான மருத்துவம் சம்பந்தமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சேடபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.