தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த திரிதேவ் என்ற மாணவன் இமாச்சல பிரதேசம் சோலாரில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் தனது திறமையை வெளிப்படுத்தி வெண்கல பதக்கம் வென்றார்.

இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த மாணவனுக்கு, பெற்றோர்,
கிராம மக்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோறும், கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பிலும் பாராட்டு விழா நடைபெற்றது.

இதனை மகிழ்ச்சி பொங்க ஏற்று கொண்ட கிக் பாக்சிங்கில் வெற்றி பெற்ற திரிதேவ் என்ற மாணவன் கூறுகையில் தனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள், தனக்கு முன்னோடியாக இருந்த குடும்பத்தினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதோடு சர்வதேச அளவில் வெற்றி பெற்று சாம்பியன் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் தெரிவித்தார்.