சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
பாஜக விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக தெரிவித்த அவர், சம்பவம் நடந்த உடனே வந்த அனுராதாவூர் ஹேமமாலினி அண்ணாமலை ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் இங்கு எப்படி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதைதான் விவாதிக்கிறார்கள்

அதே நேரம் திமுக விஜய் தாமதமாக வந்ததால்தான் விபத்து எனக் கூறுகிறது
ஆளுக்கு ஆள் பட்டிமன்றம் நடத்துவதற்கான இடம் இது இல்லை.
கரூர் விவகாரத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றால் மணிப்பூர் கலவரத்திற்கு குஜராத் அரசு பொறுப்பேற்க வேண்டும்
விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை தயக்கம் காட்டுவதை பார்க்கும் போது திமுக, தவெக இடையே ரகசிய தொடர்பு இருக்கலாம் என்ற திருமாவளவனின் சந்தேகம் குறித்த கேள்விக்கு திருமாவளவன் அவர்களுடன் (திமுக) இருப்பதால் அது
உண்மையாக கூட இருக்கலாம்.
கரூர் சம்பவத்திற்கு முதல் காரணி விஜய் தான் என குற்றச்சாட்டு, விஜய் அங்கு வராமல் இருந்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க முடியாது, எல்லாமே அரசுதான் என விஜய் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
கரூர் சம்பவதிற்கு விஜய் முதலில் பொறுப்பு ஏற்க வேண்டும், பின்னர் வருந்த வேண்டும்.
விஜய் மீது விரும்பினால் வழக்கு பதிவர்கள், விரும்பவில்லை என்றால் வழக்கு பதியமாட்டார்கள்.

கரூரில் ஏன் இந்த இடம் கொடுத்தது என கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிச்சாமி,
கொடநாடு கொலை வழக்கில் கொலை செய்தவர் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தில் 2 மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக சொன்ன முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என முதல்வருக்கு கேள்வி,
ஏமாற்று கூத்து நாடகங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வரை மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்
செந்தில் பாலாஜி ஏன் உடனே வந்தார் என்பது கேள்வி அல்ல நீங்கள் (விஜய்) ஏன் செல்லவில்லை என்பதுதான் கேள்வி
ஈரோடு இடைத்தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிகளும் போட்டியிடாத நிலையில் ஸ்டாலினா? சீமானா? என நேருக்கு நேர் மோதினோம்
அந்த தேர்தலில் எட்டறை சதவீத வாக்கு 16 சதவீதமாக உயர்ந்தது
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்பது கோட்பாட்டு அளவில் இருக்காது
எங்களுக்கு திராவிட கட்சிகளுக்குமே போட்டி, திராவிட கட்சிகளில் வலிமையாக இருப்பது திமுக தான் எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் நாம் தமிழர் கட்சிக்கு இடையேதான் போட்டி எனவும் தெரிவித்தார்.