அரியலூரில் உத்தமர் காந்தி 158வது பிறந்த தினம், காங்கிரஸ் , மதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. மதிமுக சார்பில் மகாத்மா காந்தியின் 158வது பிறந்தநாளை முன்னிட்டு , செட்டியேரி பூங்காவிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரியலுார் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, தலைமையில் மாவட்ட மதிமுக செயலாளர் க. இராமநாதன் , அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் கா.பி . சங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னதாகஅரியலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி158 வது பிறந்த தினமும், அதுபோல பெருந்தலைவர் காமராஜர் 51 வதுநினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.

நகர காங்கிரஸ் தலைவர் மாமு.சிவகுமார் தலைமையில் காங்கிரஸார் அண்ணல் மகாத்மா காந்தி சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏபிஎஸ் பழனிச்சாமி பிரஸ் செந்தில், து.ரவிச்சந்திரன், ரவிக்குமார், வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
