• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்-சார்லஸ் மார்ட்டின்..,

ByB. Sakthivel

Sep 29, 2025

கரூரில் நடைபெற்ற துயரமான சம்பவத்திற்கு தான் மிகவும் வருத்தப்படுவதாகவும், இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்காமல் இருக்க அரசு தான் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அரசாங்கத்தின் தவறே இதற்கு காரணமாக தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற ஆர்.சி.பி அணியின் ஐபிஎல் கொண்டாட்டத்தின் போது இரண்டரை லட்சத்திற்கும் மேல் மக்கள் வந்திருந்தார்கள், அது போன்ற ஒரு கூட்டத்தை சமாளிக்க முடியாமல் கிட்டதட்ட 11 பேர் உரிரிழந்தார்கள், இங்கோ 27 ஆயிரம் பேர் வந்ததற்கு இவ்வளவு பெரிய உயிரிழப்பு என்பது ஒரு மன்னிக்ககூடிய விஷயம் அல்ல.
கரூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், காவல்துறை தடியடி நடத்தியதாகவும் சொல்கிறார்கள், மக்கள் உயிர் மிகவும் முக்கியமான ஒரு விஷயம், மக்களுடைய நலன் மற்றும் உயிரை காப்பதற்கே பொது சேவைக்கு வருகின்றோம், ஆனால் அரசியல் நோக்கத்திற்காக இது போன்ற தவறான விஷயங்களை செய்யக்கூடாது, அதனை தான் முழுமையாக கண்டிப்பதாகவும், தமிழக அரசு இது போன்ற விஷயங்களின் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், ஒரு விஷயம் நடந்து முடிந்த பிறகு அதனை ஆராய்வதை விட, நடப்பதற்கு முன் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்,

விஜய் வாரம் தோறும் மக்களை சந்தித்து வருகிறார், அவருக்கு அதிகபடியான கூட்டம் வருகிறது என காவல்துறைக்கு தெரிகிறது, தெரிந்த பிறகு அவர்களுடைய பணி மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தான், ஆனால் அதனை அவர்கள் செய்ய தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி அவர், இவ்விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் தான் உன்மைகள் வெளிவரும் எனவும் கூறினார்.

இந்த உயிரிழப்புகள் என்பது யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் என்றாலும், இதில் உள்ள உன்மைதன்மைகளை ஊடகங்கள் தான் வெளிகொண்டு வர வேண்டும், பொதுமக்களூக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறை மற்றும் அரசினுடைய கடமை, தமிழகத்தில் திமுக ஒரு கூட்டங்களை நட்தும்போது முறையாக திட்டமிடமிடலோடு நடத்துகிறார்கள். ஆனால் புதிதாக ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவர்களை தடுத்து நிறுத்த எல்லா வேலையும் செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.