• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு

Byமதி

Dec 14, 2021

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடிகைகள் கரீனா கபூர்கான் மற்றும் அம்ரிதா அரோரா பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதால் இவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கரீனாவும், அம்ரிதாவும் பங்கேற்றனர். அந்த புகைகப்படத்தை இன்ஸ்டாகிராம் சமூக வளைத்தளத்தில் கரீனா பதிவிட்டிருந்தார்.

இதேபோல் நடிகரும் இயக்குநருமான கரண் ஜோகர் வீட்டில் நடைபெற்ற விருந்திலும் இவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மேலும், அலியா பட் மற்றும் அர்ஜூன் கபூர் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றால் கரீனா கபூர், அம்ரிதா அரோரா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.