• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜம்முவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 14 போலீசார் படுகாயம்!..

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 போலீசார் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 போலீசார் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஸ்ரீநகரின் பாந்தாசாவு பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த போலீசாரில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.