கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் கையை கடித்த குரங்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியர்களாக பணியாற்றும் சுப்ரியா உள்பட 4 பேர் வந்தனர். அவர்கள் குணாகுகை பகுதியை அவர்கள் கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.

அப்போது குரங்கு ஒன்று சுப்ரியா வைத்திருந்த கைப்பையை பறிக்க முயன்றுள்ளது. சுதாரித்துக்கொண்ட சுப்ரியா, கைப்பையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் சீறிய குரங்கு, சுப்ரியாவின் வலது கையில் கடித்துவிட்டு ஓடிவிட்டது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.