மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த தே.கல்லுப்பட்டி பேரூராட்சி அரசு போக்குவத்தது பணிமணை அருகே உள்ள அழகுநாச்சியார் ஊரணி அண்மையில் மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் மூலம் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

சுற்றுசுவர் கட்டி இரண்டு மாதங்கள் ஆனநிலையில் 7 அடி உயரம் 100 நீளம் கொண்ட ஒரு பகுதி சுற்றுச் சுவர் முழுவதுமாக அடியோடு சாய்ந்தது. இந்த சுற்றுசுவரின் அடித்தளம் சரியாக அமைக்காத காரணத்தினாலும், தரம் மற்றும் முறைகேடு காரணமாக சுற்றுசுவர் இடிந்து விழுந்துள்ளதாகவும் அதிஷ்டவசமாக அப்பொழுது பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் புகார் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து தரமற்ற முறையில் சுவர் கட்டப்பட்டதை உரிய விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த பகுதியை ஆய்வு செய்தமுன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஊரணி கரையில்அமர்ந்து மக்களோடு மக்களாக சேர்ந்து அறவழிப் போராட்டத்தில்.ஈடுபட்டு வருகிறார்.போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உடன் கல்லுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் தேவி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொள்ள உள்ள துணை முதல்வர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்லும் வண்ணமாக தற்போது இந்த அமைதிப் போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் 50 லட்சம் மாநில அரசின் பொது நிதியின் கீழ் 20 லட்சம் என இந்த ஒரு பகுதியிலேயே 70 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டு நடைபெற்ற இந்த பணிகளில் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றுள்ளதால் ஊரணியின் சுவர் இடிந்து விழுந்து உள்ளது.இதேபோன்று அனைத்து பகுதிகளிலும் முறைகேடு நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி மதுரைக்கு வரக்கூடிய துணை முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மக்களோடு சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். என்றார்.விருதுநகர் மற்றும் மதுரை பகுதியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக ஆய்வு நடத்த வரும்துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உயர் அளவுக்கு கள ஆய்வு மேற்கொள்ளாமல் நடந்துள்ள முறையீடுகளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார்.