தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
- பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் எந்த எந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு குறித்து தெரிவித்துள்ளார்.
- 12% GST வாங்கி வந்த 90 சதவீத பொருட்களுக்கு 5% மாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
- 5% GST இருந்த பொருள்களுக்கு 0% என வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
- ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இருப்பார்கள் என்றால் இரண்டு குழந்தைக்கும் பொருட்கள் வாங்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
- இதற்கு காரணம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி

- தமிழ்நாடு முழுவதும் மோடி வீடு திட்டம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் கட்டட பொருள்களின் விலை அதிகமாக இருந்து வருகிறது.
- குறிப்பாக கம்பி சிமெண்ட் 28 சதவீதம் வரி இருந்ததை குறைத்துள்ளனர்.
- ஒவ்வொரு சிமெண்ட் விளையும் ரூ.50 முதல் 60 வரை குறைகிறது.
- பொருட்களின் விலை குறைக்காமல் நுகர்வோர் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூடுதல் வரிவிதிப்பு செய்யப்பட்டிருந்த டூத் பேஸ்ட், டூத் பவுடர், ஹேர் ஆயில் மற்றும் சோப் ஆகியவற்றிற்கு 5% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- பாலுக்கு வரி கிடையாது
- நடுத்தர மக்களிலிருந்து, சாதாரண மக்கள் வரை அனைவரும் ஏசி பயன்படுத்துகின்றனர். அதன் வரி குறைக்கப்பட்டுள்ளது
- இன்சுரன்ஸ் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.
- இந்த வரி குறைப்பினால் சாதாரண மக்கள் தங்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களை அதிகளவு பெருக்க முடியும்.
- தற்போது வரிக்குறைப்பினால் பொருட்களை அதிகளவில் மக்கள் வாங்குவார்கள் அதன் மூலம் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும் இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
- மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- நாளை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதற்காக மத்திய நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் ஏற்பாடு செய்துள்ளனர்.
- *மற்ற தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து கூற மாட்டார்கள் மற்ற நிகழ்வுக்கு வாழ்த்துக்கள் கூறுவார்கள். பிரதமர் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்லும் பொழுது தீபாவளிக்கு எல்லா மக்களும் எல்லா பொருளும் வாங்க வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நாளையில் இருந்து இந்த வரி குறைப்பு கொண்டு வந்துள்ளார்.
- 1947 இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த பிறகு இதுவரை கூட்டின வரியை குறைத்த அரசாங்கம் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கமாக மட்டுமே இருக்க முடியும். எந்த அரசாங்கமும் இருக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- மத்திய நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள். என தெரிவித்தார்.