பெரம்பலூர் நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலானது, சங்குபேட்டை 19வது வார்டில் அமைந்துள்ளது.
பெருமாளுக்கு உகந்த தினம் சனிக்கிழமையாகும், அதிலும் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வாய்ந்தவையாகும்.

அதனடிப்படையில் இன்று முதல் சனிகிழமையையொட்டி வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து நன்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இந்த சிறப்பு பூஜையில் பெண்கள், மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் அவரவர் குடும்ப வழக்கப்படி விளக்கேற்றி வழிபட்டனர்.

புரட்டாசி மாதம் 4ம் தேதி முதலாவதுவது சனிகிழமையையொட்டி ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாகவும் மற்றும் 19வது வார்டு சங்குபேட்டை அன்னதான குழுவினர் சேர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.











; ?>)
; ?>)
; ?>)