திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். பணம் மீட்பு. கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி – திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன்(37), தவமணி(27), சத்யராஜ்(27) புதுக்கோட்டையை சேர்ந்த தணிகாசலம்(26) சிவகங்கை சேர்ந்த ராஜேஷ்(28) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் 2 காரில் வந்து கோவர்த்தனன் வந்த காரை மறித்து கழுத்தில் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர் .
கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து வடமதுரை காவல் ஆய்வாளர் நிதிக்குமார், சார்பு வேலுமணி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு கார், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.