திண்டுக்கல் நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழா நடந்தது. மாவட்ட S.P.பிரதீப் ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக DSP. தங்கப்பாண்டி, நிலக்கோட்டை DSP. செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடந்தது.

இதில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு முகாமில் சமூக நீதி பற்றியும், மனித நேயம் பற்றியும், வழங்கப்படும் பண பலன்கள், நலத்திட்டங்கள், பாலியல் வன்கொடுமை பற்றியும், குழந்தை திருமணம் பற்றியும், சைபர் கிரைம், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், செல்போன் பயன்படுத்துவதில் உள்ள பாதிப்புகள் பற்றியும் சாலை விதிமுறைகளை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவிகள், ஆய்வாளர் ராஜபுஷ்பா, சார்பு ஆய்வாளர்கள் பூபதி, மனோகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஹரிகிருஷ்ணமுரளி, முத்துராஜ், பிரகாஷ், கல்லூரி முதல்வர், பேராசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.