யானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயற்கை எழில் தழும்பும் பகுதியாகவும், அமைதி தழுவும் இடமாகவும் விளங்குவது பேரிஜம் ஏரியாகும். இந்தப் பகுதியில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் யானைகள் இடம் பெயர்ந்து தற்போது இனப்பெருக்க காலம் என்பதாலும் அவை இடம்பெயர்ந்து உள்ளன. தண்ணீர் அருந்துவதற்கும் மிதமான தட்பவெப்ப சூழ்நிலை நிலவுவதால் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ளன.
நாளை முதல் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது பயணிகளிடம் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. பேரரிஜம் ஏரியை சுற்றி பார்க்க குறி வைத்து வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.