பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் சுமார் 180 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் 350 ஏக்கர் இலவச விலை நிலம் வழங்கப்பட்டது.

அந்த நிலத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எறையூரில் கோத்தாரி நிறுவனத்தின் சார்பில் சிப்காட் நிறுவனத்திற்காக நிலத்திற்கு பதிலாக மாற்று நிலம் அரை ஏக்கர் வழங்கி பட்டா கொடுப்பதாகவும் மற்றும் குடும்பத்திற்கு ஒரு நபருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் கூறி 249.49 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர்.
ஆனால் அவற்றை வழங்காமல் காலதாமதம் செய்யும் திமுக அரசையும் திமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை
கண்டித்து தென்னிந்திய விவசாயிகளின் நதிகள் இணைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இவர்களோடு சமாதான பேச்சு வார்த்தைக்கு முற்பட்டபோது எங்களுக்கு நீதி கிடைக்காமல் நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால்,
போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்களை குண்டு கட்டாக தூக்கி காவல்துறையினர் கைது செய்தனர்.
பரபரப்பாக இயங்கக்கூடிய பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
பெரம்பலூர் அடுத்த எறையூர் ஊராட்சியில் நரிக்குறவர்கள் சமூகத்தினர் தங்களுக்கு வழங்க வேண்டிய பட்டா மற்றும் வேலை வாய்ப்பு வழங்கவில்லை என திமுக துணை பொதுச்செயலாளர் ராசா அவர்களை கண்டித்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் சுமார் 180 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் 350 ஏக்கர் இலவச விலை நிலம் வழங்கப்பட்டது.
அந்த நிலத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எறையூரில் கோத்தாரி நிறுவனத்தின் சார்பில் சிப்காட் நிறுவனத்திற்காக நிலத்திற்கு பதிலாக மாற்று நிலம் அரை ஏக்கர் வழங்கி பட்டா கொடுப்பதாகவும் மற்றும் குடும்பத்திற்கு ஒரு நபருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் கூறி 249.49 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர்.

ஆனால் அவற்றை வழங்காமல் காலதாமதம் செய்யும் திமுக அரசையும் திமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை
கண்டித்து தென்னிந்திய விவசாயிகளின் நதிகள் இணைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இவர்களோடு சமாதான பேச்சு வார்த்தைக்கு முற்பட்டபோது எங்களுக்கு நீதி கிடைக்காமல் நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்களை குண்டு கட்டாக தூக்கி காவல்துறையினர் கைது செய்தனர்.