• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு மாணவன் கைது..,

ByS.Ariyanayagam

Sep 12, 2025

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மூதாட்டி மீது மிளகாய்பொடி துாவி 3 பவுன் தங்க செயினை பறித்த பெண் உடந்தையாக இருந்த மாணவன் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87)இவர் அதிகாலை கடையை திறந்த போது மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இது குறித்து வேடசந்தூர் DSP.பவித்ரா உத்தரவின் பேரில் எரியோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு கரூரில் தலைமறைவாக இருந்த பாகாநத்தத்தை சேர்ந்த 35 வயது பெண் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.