திண்டுக்கல் அருகே மணல் அள்ளிய கூட்டம் அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பி ஓட்டம் பிடித்தது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே வேல்வார்கோட்டை ஊராட்சி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் மணல் அள்ளப்பட்டது.
ஹிட்டாச்சி கொண்டு பத்துக்கும் மேற்பட்ட ட்ரிப்பர் மூலம் மண் அள்ளிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனடிப்படையில் அதிகாரிகள் செல்வதற்கு முன்பே தகவல் அறிந்து ட்ரிப்பர் அனைத்தும் ஒடி விட்டன. ஹிட்டாச்சி மட்டும் குளத்தில் இருந்துள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட ட்ரிப்பர்களின் எண் மற்றும் அடையாளம் SBM கல்லூரி முன்பு உள்ள CCTV CAMERA மூலம் கண்டறிய வேண்டும். அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து மண் திருட்டில் ஈடுபட்ட அதன் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்தினை ஆய்வு செய்து திருடப்பட்ட கனிமத்தின் அளவை அறிந்து உரிய இழப்பீடு தொகையை மண் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூலம் அபராதம் விதிக்க வேண்டும் . அரசுக்கு சேர்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் வடமதுரை ஒன்றியக்குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.