தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற இபிஎப் ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் பொங்கல் கருணை தொகை வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதற்காக, அனைத்து திருக்கோயில் ஓய்வு பெற்ற இபிஎப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், மாநில தலைவர் கருப்பையா, பொதுச்செயலாளர் அரவணைச்செல்வன், பொருளாளர் திருப்பரங்குன்றம் கல்யாணசுந்தரபாண்டி துணை செயலாளர்கள் திருச்செந்தூர் மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியப்பன் சுப்பையா திருநெல்வேலி செண்பகம் மற்றும் நிர்வாகிகள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.