• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காரைக்குடி அழகப்ப செட்டியாரின் மகள் காலமானார்!

காரைக்குடி அழகப்ப செட்டியாரின் மகளும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஆயுள் உறுப்பினருமான உமையாள் ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 93. இவர் 1928ஆம் ஆண்டு அக்டோபா் 4ஆம் தேதி கோட்டையூரில் பிறந்தார். காரைக்குடியிலும், சென்னையிலும் மழலையா் பள்ளி, ஆயத்தப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை நிறுவியுள்ளார்.

பெண்கள் எல்லா நிலைகளிலும் தன்னுயா்வு பெறும் பொருட்டு 2005இல் காரைக்குடியில் மகளிர் கல்லூரியைத் தொடக்கினார்.
இவருடைய கல்விப்பணி, சமூகப் பணியைப் போற்றும் விதமாக 1987இல் அழகப்பா பல்கலைக்கழகமும், 2007இல் சென்னைப் பல்கலைக்கழகம் அதனுடைய 150ஆவது ஆண்டு விழாவில் டி.லிட். பட்டத்தை வழங்கிக் கௌரவித்தன.

மறைந்த முதல்வா் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில், காரைக்குடியில் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வரும் 450 ஏக்கா் நிலத்தை தமிழக அரசுக்கு தானமாக வழங்கினார். சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மிகச் சிறப்பாகச் செயலாற்றியதற்காக இந்திரா காந்தி பிரியதா்ஷினி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
காரைக்குடி டாக்டா் அழகப்ப செட்டியார் அறநிலையின் செயலா், காரைக்குடி அழகப்பா ஆரம்பப் பள்ளியின் தாளாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், உமையாள் ராமநாதன் திடீரென மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்துக்கு உள்ளானேன் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது திடீா் மறைவு பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.