பெரம்பலூர் நகர சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு மகா தீபம், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பு செய்தனர்.
விழாவையொட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .

ஆவணி மாதம் பௌர்ணமியையொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆவணி மாதத்தில் பெளர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வண்ண மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர்.
ஆவணி .மாதம் பௌர்ணமியையொட்டி உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.
19 வார்டு அன்னதான குழுவினர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அபிஷேக பொருட்கள், மற்றும் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனர் . மாதம் தோறும் வரும் அம்மாவாசை, பெளர்ணமி நாட்களில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

நிகழ்ச்சியினை 19 வார்டு அன்னதான குழுவினர் முன்னின்று நடத்தினார்கள், விழாவில் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
