பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல்தொழில் நுட்பவியல், கணினி அறிவியல் துறைச் சார்பாக ரோபோ நோவா – 2025 என்னும் தலைப்பில் ரோபோடிக் கண்காட்சி 03.09.2025 இன்று நடைபெற்றது.

இவ்விழாவினைத் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார். அவர்கள் வருகை புரியும் போது நிலா என்று பெயர் சூட்டப்பட்ட இயந்திர மனித உருவ பெண் பூங்கொத்து கொடுத்து வரவேற்றத்தை தொடர்ந்து
ரோபோடிக் கண்காட்சியினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்கள்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகம், பேராசிரியர் கங்காதரன் அவர்கள் கலந்துக் கொண்டு, வளர்ந்து வரும் துறைகளுள் மிக முக்கியமான துறை எதுவென்றால் செயற்கை நுண்ணறிவுத் துறை, வருங்காலத்தில் அதன் முக்கியத்துவம் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தார்.
இவ்விழாவில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ரோபோ மிராக்கிள் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல்தொழில் நுட்பவியல், கணினி அறிவியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் வெற்றிவேலன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் ஐயா அவர்கள் முன்னிலையில் கையெழுத்திட்டார்கள்.
இதன் மூலம் பல்வேறு வேலைகளைச் செய்யும் ரோபோவை மாணவர்கள் உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்கப்படும், மாணவர்கள் புதுமைகளைக் கற்றுக் கொள்ளவும், புதுமைகளை உருவாக்கவும், சரியான தளத்தை அமைத்து தரும்.
இந்த கண்காட்சியில் தன்னாட்சி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தன்னாட்சி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜியில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு 10-க்கும் மேற்பட்ட ரோபோக்கள். தானியங்கி இயந்திரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், தொழில் நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் போன்ற புதுமைகளைக் காட்சிப்படுத்தினார்கள்.
இந்த கண்காட்சியில் அதி நவீன தொழில் நட்பத்துடன் கூடிய விபத்து கண்டறிதல் குறித்த ஸ்மார்ட் ஹெல்மெட், பார்வைத் திறன் குறைவான மாற்று திறனாளிகளுக்கு ஸ்மார்ட் பிளைன்ட் ஸ்டிக், உடல் நிறை கண்காணிக்கும் கால்குலெட்டர், தானியங்கி இரயில்வே கேட் கட்டுப்பாடு அமைப்பு, அர்டுயினோ அடிப்படையிலான ஸ்மார்ட் பிரிட்ஜ் மூலமாக தகவல் கொடுக்கும் ரோபோட் போன்ற அதிநவீன தொழில் நுடபங்களுடன் கூடிய புதுமைகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி தனது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் ஐயா அவர்கள் சிறந்த கண்டுபிடிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து முதல் ஐந்து இடத்தை பிடித்த கல்லூரிகளுக்கு விருதுகளும், கேடயமும், சான்றிதழ்களும் வழங்கினார்கள்.

இந்த கண்காட்சியின் மூலம் ரோபோக்கள் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். தொழில்துறை மற்றும் கல்வித்துறைகளில் ரோபோக்களின் பயன்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. ரோபோட்டிக்ஸ் துறையில் உள்ள நிபுணர்களை ஒன்றிணைத்து அறிவைப் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு சூழலை உருவாக்கும்.
முன்னதாக சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெற்றிவேலன் வாழ்த்துரை வழங்கினார்கள். துணை முதல்வர் பேராசிரியர் சந்திர சௌத்ரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர் இளங்கோவன் அவர்களும், தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாடு அலுவலர் முனைவர் நந்தகுமார் ஆகியோர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்.
கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பவியல், செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றல் துறைத்தலைவர் முகமது அசாருதீன் நன்றியுரை வழங்கினார்.
மேலும் பிற கல்லூரிகளில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்காட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தார்கள்.