மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய குழந்தைகளின் கல்விக்கான நிதி 2152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் செந்தமிழன், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஏ ஜி சிதம்பரம் வர்த்தக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சக்தி கண்ணன், தணிகாசலம், நல்லமணி, பெர்னட் ஜான்சன், தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராஜராஜேஸ்வரி, உமா, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)