பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னணி இயக்கம் சார்பில் முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற தலைப்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (31.08.2025) இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது வேல்முருகன் பேசுகையில் தமிழ்நாடு என்று எவ்வளவு பெரிய இன்னல்களை துன்பங்களை நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக அறிவேன்.
குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை யாரால் நம்மீது திணிக்கப்படுகிறது என்பதையும் நான் அறிவேன்,
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் ஒன்றிய அரசு அதற்கு ஒரு ஏற்ற அரசாக இருந்து கொண்டு ஒரு மாநில முற்றதிகாரத்தையே தனதாக்கிக்கொண்டு ஒரு காட்டு தர்பார் அரசை ஒன்றிய பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது.
சர்வாதிகார ஆட்சிக்கு தயாராகிவிட்ட நரேந்திர மோடியை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கண்டிப்பதற்கு கூட தயாராக இல்லை.

யாராவது இது குறித்து நீதிபதிகள் பேசினால் உச்சநீதிமன்ற நீதிபதியே பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்று அவர்களை சங்கிகள் தன் கையில் எடுக்கின்ற நிலையில் உள்ளது.
இதில் பெரும்பான்மையான விடயங்களை சட்டமன்றத்தில் நான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறேன்,
டாடா நிறுவனம் ஓசூரில் பத்தாயிரம் ஜார்க்கண்ட் தொழிலாளர்களை கொண்டு வந்து இறக்கி இருக்கிறார்கள் 5000 ஆண்கள் 5000 பெண்கள் கேட்பதற்கு நாதியில்லை,
சட்டமன்றத்தில் இது குறித்து நான் கேட்டேன் அமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து மாற்றம் செய்யப்படும் என்று சொன்னார் ஆனால் ஒன்றிய அரசு இதுவரை மாற்ற விடவில்லை என்ன பேசினார்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன்
ஒன்றிய அரசு தொடர்ச்சியாக சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணங்களை உயர்த்தி பல மடங்கு பொதுமக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு தேவையான பொருள்களின் விலையை உயர்த்தி மக்களை துயரத்தில் ஆளாக்கி வருகின்றனர்.
சுங்கச்சாவடி என்பது அமைக்கப்பட்ட பிறகு பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட பிறகு ஆண்டுக்கு இருமுறை கட்டணத்தை குறைப்பது தான் ஒரு நியாயமான நடவடிக்கையாக இருக்கும்.
ஆனால் அதற்கு நேர் மாறாக பன்னாட்டு பணக்கார பெரும் நிறுவனங்கள் இந்திய மக்களுடைய பணங்களை குறைந்த வட்டி விகிதங்களில் தேசிய வங்கிகளில் கடனாக பெற்று அதை நாங்கள் சாலை விரிவாக்கத்திற்காக முதலீடு செய்கிறோம் என்கிற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை ரா பகல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.
அதன் விரிவாக்கம் தான் இன்று முதல் தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட சுங்கசாவடிகளில் கட்டண உயர்வு , இதை எதிர்த்து தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி போராடி வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் பிரதான கோரிக்கை இந்த சுங்கச்சாவடிகளை முழுவதும் அகற்ற வேண்டும் என்பது தான் என்று கூறினார்.








