மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி இவரது மகன் சபரீசன் வயது 15 இவர் மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் காணவில்லை என பெற்றோர்கள் அங்கு எங்கும் தேடி உள்ளார்கள் உறவினர்கள் வீட்டிற்குள் முழுவதும் தேடி வந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் மாடியில் பக்கமாக பூட்டி இருப்பதைக் கண்டு பார்த்துள்ளார்கள். கதவை பலமுறை தட்டியில் திறக்காததால் கதவை உடைத்து பார்த்த பொழுது சிறுவன் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் உடனடியாக மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாசி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை மாடக்குளம் கண்மாயில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள் மற்றொரு பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.













; ?>)
; ?>)
; ?>)