• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

75 வயதில் மோடி ஓய்வு பெற வேண்டுமா?ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பதில்!

பிரதமர் மோடி 75 வயதினை வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடுகிறார். பாஜகவில் 75 வயதுக்கு மேல் முக்கிய பொறுப்புகளை வகிக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ், அமைப்பு தொடர்ந்து கூறி வரும் நிலையில், 75 வயதுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் மோடி தொடரலாமா என்ற கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் பதிலளித்துள்ளார்.

 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100 ஆண்டுகள் பயணம்’ என்ற தலைப்பில் மூன்று நாள் விரிவுரைத் தொடரின் ஒரு பகுதியாக அதன்  தலைவர் மோகன் பகவத் ஆகஸ்டு 28 வியாழக்கிழமை ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது,  “இந்தியத் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டுமா?”  என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு மோகன் பகவத்.

‘நான் ஓய்வு பெறுவேன் அல்லது யாராவது ஓய்வு பெற வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு ஒரு வேலை வழங்கப்படுகிறது. எனக்கு 80 வயதாகியும் கூட, ‘ஷாகா’ நடத்துங்கள் என்று சங்கம் உத்தரவிட்டால், நான் அதைச் செய்ய வேண்டும். சங்கம் என்ன சொன்னாலும் நாங்கள் செய்கிறோம்… இது யாருக்கும் ஓய்வு பெறுவதற்கானது அல்ல. சங்கம் விரும்பும் வரை நாங்கள் ஓய்வு பெறவோ அல்லது வேலை செய்யவோ தயாராக இருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார் மோகன் பகவத்.

இதன் மூலம் மோடியின் 75 வயது வரம்பு பற்றி அவர்  ஆர்.எஸ்.எஸ். முடிவு என சொல்லாமல் சொல்லியுள்ளார்.