• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கத்ரீனா கைஃப் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பு உரிமை 100 கோடி ரூபாய்க்கு சாத்தியமில்லை

பிரபல இந்திநடிகையான கத்ரீனா கைஃப் தன்னுடைய திருமண வீடியோவை ஓடிடி தளத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் 2003-ம் ஆண்டு ‘பூம்’ என்ற ஹிந்தித் திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.


இவருக்கும் பாலிவுட் நடிகரான விக்கி கவுசலுக்கும் இடையில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.இவர்களின் திருமணம் கடந்த 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்ஸ்சென்ஸ் என்ற கோட்டையில் நடைபெற்றது.இந்தத் திருமணத்திற்காக கோடிக்கணக்கான செலவில் அலங்கார ஏற்பாடுகள் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள், மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.


மேலும், இவர்களின் திருமணத்தை பதிவு செய்து வெளியிட அமேஸான் ஓடிடி தளம் 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமாக ஓடிடி தளங்களுக்கு படங்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யும் முகவர்களிடம் பேசியபோது இது அதிகாரபூர்வமான செய்தியல்ல அதிலும் ஒரு நடிகையின் திருமணத்தை 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்க கூடிய அளவு அதன்மூலம் வருமானம் கிடைக்காது நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையே 100 கோடிக்கு விற்க முடியாத சூழலில் ஒரு திருமண நிகழ்வை100 கோடி கொடுத்து வாங்குவார்களா என்பதை ஊடகங்களும் ஆய்வுக்கு உட்பட்டுத்துவதில்லை அதனால் இப்படிப்பட்ட செய்திகள் பரவுகின்றன என்றனர். இந்த நிலையில் இவர்களது திருமண நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காத்ரீனா கைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.